பள்ளிபாளையம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து டிரைவர் காயம்


பள்ளிபாளையம் அருகே  தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து  டிரைவர் காயம்
x

பள்ளிபாளையம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து டிரைவர் காயம்

நாமக்கல்

பள்ளிபாளையம்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி ஈரோடு அருகே உள்ள தனியார் மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனத்துக்கு சென்றது. இந்த லாரியை தேனி மாவட்டத்தை சேர்ந்த பரமகுரு (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார்.

லாரி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஈகாட்டூர் பகுதியில் வந்தபோது டிரைவர் தூங்கியதாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பரமகுரு காயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெப்படை போலீசார் காயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story