குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர் கைது


குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர் கைது
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்த தனக்கோட்டி மகன் மருது (வயது 32) லாரி டிரைவர். நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வந்த மருது கலெக்டர் கார் விடும் இடம் அருகே கையில் வைத்திருந்த டீசல் கேனை திறந்து தலை மீது டீசலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ளப்போவதாக மிரட்டல் எடுத்துள்ளார். உடனே அருகில் இருந்த போலீசார் அவரை பிடித்து தண்ணீர் ஊற்றி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் தினமும் குடித்து விட்டு வந்ததால் அவரது பெற்றோர, மனைவி, பிள்ளைகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க வந்்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story