விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
கமுதி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் செய்து கொண்டார்.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உமையதங்கம் (வயது 45). லாரி டிரைவர். இவரது 2-வது மகன் சந்தோஷை, ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இவரது உறவினர்கள் இவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த உமையதங்கம் தற்போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story