மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை
x

குடும்பத்தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அரியலூர் மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன் (வயது 37), லாரி டிரைவர். நேற்று முன்தினம் அரியலூரில் இருந்து திருமயத்துக்கு சிமெண்டு மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில், குடும்பத்தகராறு காரணமாக விரக்தியில் இருந்த சவுந்தர்ராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்து சாலையோரம் மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story