காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி-நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்


காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி-நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்
x

காவேரிப்பட்டணம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

லாரி டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜமேதார் மேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), லாரி டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே முனியப்பன் என்பவரின் விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்து 15 அடி ஆழம் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தண்ணீருக்குள் சென்ற அவர் வெளியே வராத நிலையில்,அச்சமடைந்த அவரது நண்பர்கள், அவரை மீட்கும் வகையில் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்குதகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி, கிணற்றின் அடியில் சேற்றில் சிக்கி இருந்த சுரேசின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சுரேசின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற லாரிடிரைவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story