லாரி டிைரவர், கழுத்தை நெரித்து கொலை
நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற லாாி டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரான கம்பி கட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி;
நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற லாாி டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரான கம்பி கட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி டிரைவர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் சசிக்குமார்(வயது 28). லாரி டிரைவர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணிசிறமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மணிமாறன்(வயது 31). கம்பி கட்டும் தொழிலாளியான இவர், தற்போது சீர்காழி பிடாரி கீழ வீதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி
சசிக்குமாரும், மணிமாறனும் நண்பர்கள். இதனால் மணிமாறன் வீட்டுக்கு சசிக்குமார் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் மணிமாறனின் மனைவியிடம் சசிக்குமார் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
தகராறு
இதை அறிந்த மணிமாறன் சசிக்குமார் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார். நண்பர் என்று நினைத்தவர் செய்ய முயன்ற காரியத்தால் அவரது ஆத்திரம் தணியவில்லை.நேற்று முன்தினம் சசிக்குமார் வழக்கம்போல் மணிமாறன் வீட்டுக்கு சென்றார். அப்போது மணிமாறனுக்கும், சசிக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், சசிக்குமாரின் கழுத்தை நெரித்தார். இதில் சசிக்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சசிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.