லாரி டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் லாரி டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் லாரி டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
லாரி டிரைவர்
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள தன்னூத்து காலனியை சேர்ந்த முனியாண்டி மகன் கண்ணன் (வயது 26), லாரி டிரைவர்.
இவர் ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, தன்னூத்து வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அய்யாபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் கண்ணன் மீது வழக்கு விசாரணை நடந்தது.
20 ஆண்டு சிறை
வழக்கை நீதிபதி அன்புச்செல்வி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெப ஜீவராஜா ஆஜரானார்.