விபத்தில் வாலிபர் பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு 7 மாதம் சிறை தண்டனை


விபத்தில் வாலிபர் பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு 7 மாதம் சிறை தண்டனை
x

விபத்தில் வாலிபர் பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்

அன்னதானப்பட்டி:

வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் அர்ஜூன் (வயது 23). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி சேலம் வந்து விட்டு மீண்டும் வெள்ளாளகுண்டம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் அவர் சென்ற போது, எதிரே கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அர்ஜூன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தியதாக சென்னையை அடுத்த மாதவரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னையா (36) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஸ்டல் பபிதா, குற்றம்சாட்டப்பட்ட லாரி டிரைவர் சின்னையாவுக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story