லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 48). லாரி உரிமையாளர். இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த சில நாட்களாக கடன் பிரச்சினையில் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் உள்ள பேன் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று, நவநீதகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story