செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்


செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்
x

செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் சிறப்பு தாசில்தார் ரமேஷ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்த போது அதில், செங்கல் சூளைக்கு 2 யூனிட் மண் இருந்தது. அவர்களிடம் மண் எடுத்துச்செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் மண் கடத்திச்சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பார்த்தீபன் (வயது 31) என்பவரை கைது செய்தனர். மதி என்பவரை தேடி வருகிறார்கள்.


Next Story