ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள கோல்டன் சிட்டியில் வசித்து வந்தவர் தமிழ்வாணன் (வயது 34). இவரது மனைவி நந்தினி (33). தமிழ்வாணன் ஷேர் மார்க்கெட்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ளார்.

இந்தநிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழ்வாணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story