தையல் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை
தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தையல் கடை
லால்குடி அருகே உள்ள தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பத்மபிரியா (வயது 36), இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே மன வேதனையில் இருந்து வந்த பத்மபிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.