லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வீரசோழன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீரசோழன் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று ெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 65) என்பதும், வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அபுபக்கரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1,300 மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story