அய்யன்கொல்லியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
அய்யன்கொல்லியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், முருகேஷன் ஏட்டு சந்திரன், முதுநிலை காவலர் கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கேரளமாநிலம் வயநாடுமாவட்டம் சீரால் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டுஅய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளிக்கு செல்ல ஜீப்பில் ஏறியவரை பிடித்து சோதனைசெய்தபோது 930 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அவரை சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவா் கொளப்பள்ளி அருகே படச்சேரியை சேர்ந்த செல்வகுமார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story