சென்னிமலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


சென்னிமலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
x

சென்னிமலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மேலப்பாளையம் செந்தூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 2-வது மகன் சரவணன் (வயது 25). எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் சரளைமேட்டை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகள் ரஞ்சிதா (வயது 23). இவா் பி.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி படித்துவிட்டு சரவணன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனால் சரவணனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ரஞ்சிதாவின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரஞ்சிதாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சரவணனும், ரஞ்சிதாவும் நேற்று காலையில் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சரவணனின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சரவணனின் பெற்றோர் அவரையும், ரஞ்சிதாவையும் தங்களது வீட்டு்க்கு அழைத்து சென்றனர்.



Next Story