வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம்: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஆஜர்; இருவீட்டார் மோதல் பண்ருட்டி அருகே பரபரப்பு


வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம்:  போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஆஜர்; இருவீட்டார் மோதல்    பண்ருட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அப்போது இருவீட்டார் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

காதல் திருமணம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் கோமதி (வயது 19). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாயமான மகளை கண்டு பிடித்து தரக்கோரி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோமதிக்கும், அவருடைய காதலரான ஒறையூர் பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (26) என்பவருக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது தெரியவந்தது.

காதல் ஜோடி ஆஜர்

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக காதல் ஜோடிக்கு போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி பாலமுருகன், கோமதி ஆகியோர் நேற்று புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவரது வீட்டாரும் தங்களது உறவினர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

இருவீட்டார் மோதல்

அப்போது காதல் திருமணம் செய்தது தொடர்பாக கோமதியின் வீட்டார் மற்றும் அவரது உறவினர்களுக்கும், பாலமுருகனின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் திட்டி மோதிக்கொண்டனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக தலையிட்டு இருவீட்டாரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story