காதல் திருமணம் செய்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி பீமநகர் வடக்கு யாதவதெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39). இவர் கடந்த 2009-ம் ஆண்டு கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சுதாகர் சரவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story