காதல் திருமணஜோடி மனு


காதல் திருமணஜோடி மனு
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காதல் திருமணஜோடி மனு அளித்தது.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குரும்பலாபேரியைச் சேர்ந்தவர் அருணாதேவி (வயது 22). இவர் நேற்று தனது காதல் கணவருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினார்.

அதில், ''நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறேன். நானும் எங்கள் பகுதியை சேர்ந்த அமிர்தராஜ் (27) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் திருமணம் குறித்து எனது பெற்றோரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் எங்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் எனது தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து கொண்டு களக்காட்டை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால் எனது பெற்றோர், அமிர்தராஜ் என்னை கடத்தி சென்று விட்டதாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பொய்யான புகார் செய்துள்ளனர். எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.


Next Story