காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

செய்யாறு

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெம்பாக்கம் தாலுகா மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் லட்சுமிக்கு (வயது 21) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்.

ஆனால் லட்சுமி, மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆனந்துடன் அவரது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் லட்சுமி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்று கதறினார்.இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் தனது மகள் லட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரம்மதேசம் சப்- இன்ஸ்பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story