நல்லூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


நல்லூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

நல்லூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

நாமக்கல்

கந்தம்பாளையம், ஜூன்.9-

கந்தம்பாளையம் அருகே உள்ள செக்குபட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய மகள் சுஷ்மிதா (வயது 19). இவர் வேலகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், ரிக் வண்டி மேலாளரான அணியார் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (27) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கொல்லிமலை ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுஷ்மிதா, தினேஷ்குமார் குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story