கீழநவ்வலடிவிளைபத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேகம்
கீழநவ்வலடிவிளை பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி கீழநவ்வலடிவிளை பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேம் மற்றும் கோவில் முன்மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோவில் முன்மண்டபம் திறப்பு விழா திருப்பணிக்குழு ஆலோசகர் கே. வி. மகாதேவன் நாடார் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் கே.நடராஜன், நிர்வாகக்குழு ஊறுப்பினர்கள் ஏம்.ராம்குமார், ஏஸ்.மோகன் சுந்தர்ராஜ், ஏஸ்.மோகனலிங்கம், கே.செல்வராஜன் மற்றும் ஜே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாகக்குழு தலைவர் சுகுமார் மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் கும்பபூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாரதனை மற்றும் விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு திருவிளக்குபூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளை வழிபட்டனர்.