லயோலா கல்லூரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


லயோலா கல்லூரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா- முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
x

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா லயோலா கல்லூரியில் 20-ந்தேதி நடைபெறுகிறது

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா லயோலா கல்லூரியில் 20-ந்தேதி நடைபெறுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், ஆயர் நீதிநாதன், பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், பெர்னாண்டஸ் ரத்தினராஜ், டேவிட் பிரகாசம், முகமது இம்ரானுல்லாஹ் பாகவி, ஜோ அருண், வின்சென்ட் மார் பவுலோஸ், மரிய பிலோமினா வாழ்த்துரை வழங்குகிறார்கள்.


Related Tags :
Next Story