குடிபோதையில் படுத்துக்கொண்டு பீடி புகைத்தவர் தீயில் கருகி சாவு


குடிபோதையில் படுத்துக்கொண்டு  பீடி புகைத்தவர் தீயில் கருகி சாவு
x

தூத்துக்குடியில் குடிபோதையில் படுத்துக்கொண்டு பீடி புகைத்தவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ஜான். இவருடைய மகன் கால்சன் ஜான் (வயது 51). பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் குடிபோதையில் வீட்டின் முற்றத்தில் டிஜிட்டல் பேனரை விரித்து அதன் மீது படுத்து இருந்தாராம். அப்போது பீடி புகைத்து விட்டு அணைக்காமல் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் பேனரில் தீப்பற்றி எரிந்தது. குடிபோதையில் இருந்த கால்சன் ஜானால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் அவரது உடலிலும் தீப்பற்றியது. இதில் பலத்த காயம் அடைந்த கால்சன் ஜான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story