முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாதனூர் ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாதனூர் ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாதனூர் ஒன்றிய தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாதனூர் ஒன்றிய தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாதனூர் ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் ஒன்றிய கழக செயலாளரும், மாதனூர் ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பிரேமா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதனூர்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட வேண்டும். ஜூன் 21 திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமை்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, தெய்வநாயகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜவகர் கார்த்திக், ரவிக்குமார், கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story