மாடசாமி கோவில் கொடை விழா
எட்டயபுரம் நடுவிற்பட்டி மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி மாடசாமி கோவில் கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலை 6 மணிக்கு 10 பட்டு பரிவட்ட நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சாமி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணி அளவில் மாடசாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணி அளவில் கும்ப அழைப்பு நிகழ்ச்சிநேற்று அதிகாலை 1மணி அளவில் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. மாவிளக்கு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை அடைந்தது. அதிகாலை 3 மணியளவில் மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படையலுடன் சாமக்கொடை சிறப்பு பூஜை நடந்தது. காலை 9 மணி அளவில் பொங்கல் அழைப்பு நிகழ்ச்சியும், மதியம் 12 மணியளவில் மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.