10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியடீக்கடைக்காரர் கைது
பூதப்பாண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கர்ப்பம்
பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் மாணவியின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவகுமார் (வயது 52) என்பவர் தன்னிடம் நெருங்கி பழகி வந்ததாக கூறினார். அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
கைது
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை சிவகுமார் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.