பொறியியல் துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு டாக்டர் எஸ் பீட்டர் அவர்களால் தொடங்கப்பட்ட மாதா பொறியியல் கல்லூரி
சென்னை குன்றத்தூரில் அமைந்துள்ளது மாதா பொறியியல் கல்லூரி. 1998 ஆம் ஆண்டு சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி டிரஸ்ட் மூலம் இதனைத் தொடங்கி ஏஐசிடி இன் ஒப்புதலை பெற்று அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் இக்கல்வி நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர் டாக்டர் எஸ் பீட்டர் அவர்கள்
இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற ஊரில் 1954 ஆம் ஆண்டு சூசையா பிள்ளை மற்றும் லூர்து அம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். ஒரு சிறந்த கல்வியாளராகவும் தொழிலதிபராகவும் பொது நலனில் அக்கறை கொண்ட மனிதராகவும் பன்முக திறமைகளை கொண்டு பலதரப்பட்ட தளங்களில் தன் முத்திரையை பதித்து வெற்றியாளராக திகழ்பவர் பீட்டர் அவர்கள்.
பொறியியல் துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு எல்லாவிதமான வசதிகளுடன் தொடங்கப்பட்ட மாதா பொறியியல் கல்லூரி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இதுவரை உருவாக்கியுள்ளது. கல்வி ஒழுக்கம் மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருவதிலும் இக்கல்வி நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
மாதா பொறியியல் கல்லூரியின் தலைவரான எஸ் பீட்டர் அவர்கள் தன் தந்தையின் பெயரில் சூசையா பீட்டர் எஜுகேஷன் டிரஸ்ட் என்ற அமைப்பை 1996 லும், தன் தாயின் பெயரில் லூர்து அம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற பெயரில் 1999 ஆம் ஆண்டும் துவங்கி இதன் மூலம், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் கல்வி வழங்குவதில் ஈடுபட்டு வருகிறார்.
சூசையா பீட்டர் எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம் பொறியியல் மட்டுமின்றி மேலாண்மை கல்வி, கணினி பயன்பாடு, செவிலியர் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி பல் மருத்துவம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, கட்டிடக்கலை, மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி மற்றும் இன்டர்நேஷனல் பள்ளி போன்றவற்றை அளிக்கும் 11 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் லூர்து அம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம், அவர் லேடி காலேஜ், அவர் லேடி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மாதா பப்ளிக் ஸ்கூல் என்ற சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்ட பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் 2009 ஆம் ஆண்டு மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் துவங்கி நடத்தி வருகிறார்.
பீட்டர் அவர்கள் கல்வித்துறை மட்டும் இன்றி கட்டுமானத்துறையிலும் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்தவ கல்வி அமைப்பின் தலைவராகவும், சிறுபான்மையினர் நிதி உதவிஅற்ற கிருத்துவ அமைப்பின் செயலாளர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். இவர் 2005 ஆம் ஆண்டு மதர் தெரசா எக்ஸலன்ஸ் அவார்ட் என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாண்புமிகு முன்னால் அமைச்சர் திரு முல்லைவேந்தன் மற்றும் நீதிபதி திரு சிங்காரவேலு அவர்களிடம் இருந்து கல்வி ரத்னா என்ற விருதையும் பெற்றுள்ளார்.