மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி பகுதியில்ராக்கெட் ஏவுதளத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது:கிராம மக்கள் கடும் எதிர்ப்பு


மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி பகுதியில்ராக்கெட் ஏவுதளத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது:கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி பகுதியில் ராக்கெட் ஏவுதளத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் ராக்கேட் ஏவுதளத்திற்கு மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

ராக்கெட் ஏவுதளம்

உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சி மன்றம் பகுதியில் குலசேகரன் பட்டினம் ராக்கேட் ஏவுதளம் அமைய உள்ளது. இதற்காக அருகில் உள்ள ஆதியாகுறிச்சி ஊராட்சியில் 1,500 ஏக்கர் நிலம் கையகபடுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி பொதுநலக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம், கந்தபுரத்தில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் நல அமைப்பு தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜனதா தலைவர் சரவணன், வக்கீல் ரூபஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது ராக்கெட் ஏவுதளம், அனல்மின்நிலையம் ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூறினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் யூனியன் துணைத்தலைவர் ராஜதுரை, ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், மக்கள் நலன் காக்கும் இயக்கம் மூகைதீன், மணப்பாடு வினோஜின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய நிலங்களை...

கூட்டத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்க மாதவன்குறிச்சி ஊராட்சி, ஆதியாக்குறிச்சி ஊராட்சி ஆகிய பகுதியிலுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது. அப்படி விவசாய நிலங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story