பூலித்தேவன் சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை
பூலித்தேவன் சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாசுதேவநல்லூர்:
சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவு மாளிகையில் உள்ள வெண்கல சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் சங்கை கணேசன் தலைமையில், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் தலைமையிலும், தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் நிறுவனரும், தலைவருமான முத்தையா தேவர் தலைமையிலும் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் முத்துகுமார் தலைமையில், மாநில பொறுப்பாளர்கள் தமிழ்வேந்தன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சுரேஷ் தேவர் தலைமையிலும், தமிழ் பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் தலைமையிலும், நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் மதுரை மகாராஜன் உள்ளிட்டவர்களும் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.