மதுரை புத்தக கண்காட்சி ரத்து; கலெக்டர் அறிவிப்பு..!


மதுரை புத்தக கண்காட்சி ரத்து; கலெக்டர் அறிவிப்பு..!
x

கோப்புப்படம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை:

சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பொதுமக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், தொடர்பான பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. இந்நிலையில் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது,

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக ஒத்திவைக்கப்படுகிறது. புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story