மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு


மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2023 5:35 AM IST (Updated: 21 Jun 2023 3:54 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி இறந்தார்.

மதுரை


தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி பழைய நூலக தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 63). சில வாரங்களுக்கு முன்பு இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மனோகரன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story