மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு


தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:54+05:30)

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாத ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். பயண சீட்டு வழங்கும் இடம், ஊழியர்கள் அறை, பயணிகளுக்கு இருக்கை வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் சீனியர் டிவிசனல் என்ஜினீயர் நாராயணன், (தெற்கு) ரத்னா காமராஜ், சேப்டி ஆபீசர் முகைதீன் பிச்சை, உதவி சிக்னல் டெலிகம்யூனிகேசன் என்ஜினீயர் தனராணி, டிவிசனல் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ரவிதேஜாஸ், கூடுதல் டிவிசனல் என்ஜினீயர் கபிலன், உதவி ஆபரேசன் மேலாளர் ஜோசப் மேத்யூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Next Story