மதுரையில் வாகன சோதனையின்போது 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது
போலீசார் வாகன சோதனையின் போது 2½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. மேலும் இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் வாகன சோதனையின் போது 2½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. மேலும் இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்க, உணவு கடத்தல் பிரிவு தலைவர் வன்னிய பெருமாள் உத்தரவுப்படி தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று, மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் தலைமையில், மதுரை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன், மதுரை பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த, மதுரையை சேர்ந்த வினோத், மலை மன்னன் ஆகியோரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது
இதுபோல், அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதில் வந்த, மதுரையை சேர்ந்த பூப்பாண்டி, வடிவேல் மற்றும் சவுந்திரபாண்டியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.