மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது


மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது
x

அழைப்பிதழ் விவகாரத்தில் சர்ச்சையா? என கேள்வி எழுந்து உள்ள நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.

மதுரை

அழைப்பிதழ் விவகாரத்தில் சர்ச்சையா? என கேள்வி எழுந்து உள்ள நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.

காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைைம தாங்குகிறார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்கிறார். இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை ஆற்றுகிறார்.

பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்துைர வழங்குவார் என அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது.

இந்தநிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறினார்.

இதுகுறித்து, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் பொறுப்பேற்ற பின் நடத்தப்படும் முதல் பட்டமளிப்பு விழா இன்று நடக்க உள்ளது. இதில் விழா அழைப்பிதழ் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்தது. அதாவது, பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரான அந்தந்த மாநில கவர்னர்கள் அழைக்கப்படுவது வழக்கம். இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரும், சிறப்பு விருந்தினராக கல்வியாளர் ஒருவரும் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுவர்.

சர்ச்சை

ஆனால் இந்த முறை, கவர்னர் அலுவலகத்தின் உத்தரவுப்படி மத்திய இணை மந்திரி பா.ஜ.க.வின் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக உயரதிகாரிகள் உயர்கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வாணையர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக பல்கலைக்கழகங்களின் அதிகாரம் தமிழக அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிரச்சினை இருந்து வரும் நிலையில் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story