மதுரையில் அதிகாரிகள் ஆய்வு: கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்


மதுரையில் அதிகாரிகள் ஆய்வு: கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2023 1:29 AM IST (Updated: 12 Jun 2023 12:42 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 4 மேற்பார்வையாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 4 மேற்பார்வையாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகிறது. அதாவது ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், ஆப் பாட்டிலும் ரூ.20-ம், முழு(புல்) பாட்டிலுக்கு ரூ.30-ம் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இது குறித்து மது பிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் விசாகன் மற்றும் மண்டல மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்களின் விலை பட்டியல் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

இந்த உத்தரவு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது. மேலும் விலை பட்டியல் வைப்பதற்கு 7 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 250 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளில் மண்டல மேலாளர், திடீர் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வில் சில கடைகளில் மதுபாட்டில்கள் விலை பட்டியல் இல்லாதது, கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 4 டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி ஆழ்வார்புரம் கடை செந்தில்குமார், ஆரப்பாளையம் கடை பாலமுருகன், டி.வாடிப்பட்டி சரவணக்குமார், ஆண்டிப்பட்டி பங்களா பிச்சைமாயம் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் விலை பட்டியல் குறித்து கண்காணிக்க தவறிய மாவட்ட மேலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.


Next Story