மதுரையை அதிர வைத்த கல்யாண சீர்..எதிர்பாராத மாப்பிள்ளை வீட்டார் முத்தம் கொடுத்து மகிழ்ந்த தம்பதி
சுகப்பிரியா, தனது வீட்டில் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை மேடையேற்றி தன் புது உறவுகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
மதுரை,
மணப்பெண் சீதனமாக பிறந்த வீட்டில் தான் ஆசை ஆசையாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சிகர சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுகப்பிரியாவுக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது சுகப்பிரியா, தனது வீட்டில் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை மேடையேற்றி தன் புது உறவுகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து மணமக்கள் ஜோடியாக காளைக்கு முத்தமிட்டு மகிழ, சீதனமாக அதை தன் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார் மணமகள் சுகப்பிரியா.
Related Tags :
Next Story