மதுரைவீரன் சாமி கோவில் திருவிழா


மதுரைவீரன் சாமி கோவில் திருவிழா
x

மதுரைவீரன் சாமி கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

புன்னம் நடுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மதுரைவீரன் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கருப்பண்ணசாமி, கன்னிமூல கணபதி, ஏழு கன்னிமார்கள், முருகப்பெருமான், சுயமாகத் தோன்றிய அரசு வேம்பு ஆகிய சுவாமிகள் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 23-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு கண்ணிமூல கணபதிக்கு மாவிளக்கு பூஜையும், ஏழு கன்னிமார், முருகன், அரசு வேம்பு தெய்வங்களுக்கு 6 கால பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் கிடா வெட்டு பூஜை, பொங்கல் வைத்தல், வாணவேடிக்கை நடந்தது. நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story