பிரான்மலை உச்சியில் மகா தீபம்


பிரான்மலை உச்சியில் மகா தீபம்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரான்மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் மூன்று அடுக்குகளில் சிவபெருமான் அவதரித்துள்ளார். பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் சிவபெருமான் உள்ளார். நேற்று கார்த்திகை தீப திருநாளையொட்டி மூன்று அடுக்கில் உள்ள சிவாலயத்தில் கைலாயத்தில் உள்ள மங்கை பாகர் தேனம்மை சுவாமிகளுக்கு தைலக்காப்பு செய்யப்பட்டு புது வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் சார்பில் மங்கை பாதர் தேனம்மை கோவிலில் சாமிக்கு சாத்தப்பட்ட வஸ்திரம் 48 அடி நீளம் கொண்ட விளக்கேற்றும் திரியாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் ஒன்றிணைந்து திரியை சுமந்து 2500 அடி உயரம் கொண்ட பிரான்மலைக்கு எடுத்து சென்றனர். மேலும் 100 லிட்டர் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு மலை உச்சியில் உள்ள மகா கொப்பரையில் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 48 அடி நீளம் கொண்ட சாமியின் வஸ்திரத்தை கொண்டு திரியாக பயன்படுத்தி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story