மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
கழுகுமலை அருகே கே. வேலாயுதபுரம் மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கே. வேலாயுதபுரம் மகாகணபதி, சுந்தரமூர்த்தி கோவிலில் கல் மண்டபம் மற்றும் புதிய கோபுரம் அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி பூஜை, பாலிகா பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணியளவில் மகா கணபதி, சுந்தரமூர்த்தி சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். இரவு 10 மணியளவில் பெண்களின் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை வேலாயுதபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story