மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

எம்.கண்ணனூர் கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி, ஜூலை.7-

புள்ளம்பாடி ஒன்றியம் எம்.கண்ணனூர் கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. மேலும் இங்கு விநாயகர், எல்லையம்மன் ஆகிய பரிவாரதெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புனரமைக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 5-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலையில் 3-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று விநாயகர், முருகன் மற்றும் எல்லையம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10.25 மணியளவில் மகா காளியம்மன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை கோபி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் மால்வாய், ஒரத்தூர், வரகுப்பை, மேலரசூர், சரடமங்கலம், குளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story