ஜெகநாதபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்


ஜெகநாதபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
x

ஜெகநாதபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

ஜெகநாதபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

சேத்துப்பட்டு தாலுகா ஜெகநாதபுரம் கிராமத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி கோவிலக்கு பஞ்சவர்ணம் பூசி 2 குதிரை சிலை அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலுக்கு முன்பு பந்தல் அமைத்து யாக குண்டம் ஏற்படுத்தப்பட்டது. அதில் புண்ணியநதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை 108 கலசங்களில் வைத்து இஞ்சிமேடு சிவன் கோவில் சிவாச்சாரியார் ஆனந்தன் தலைமையில் பல்வேறு மூலிகை கொண்டு யாகம் நடத்தப்பட்டது பின்னர்மேல்மருவத்தூர்,ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி தலைவர் டாக்டர் கோ.ப.செந்தில்குமார் மாரியம்மன் கோவில் விமானத்தில் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தியதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் 'அம்மா தாயே' 'அருள் புரிவாயே மாரியம்மா' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், எதிரொலி மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இரவு 10, மணி அளவில் நாடகம் நடந்தது. நிகழ்ச்சிகளில,் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

============

2 காலம்


Next Story