மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x

மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

தொட்டியம் அருகே மேக்கநாயக்கன்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்திருவிழா நடைபெற்றது. 27 -அடி உயரம் உள்ள தேரை பூக்களாலும், மாலைகளாலும் சிறப்பாக அலங்கரித்து தலை அலங்கார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தேரை தலையிலும், தோளிலும் தூக்கிவந்தனர். மேய்க்கல் நாயக்கன்பட்டி முக்கிய வீதிகளில் வழியாக திருத்தேர் ஊர்வலம் சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


Next Story