மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர்
மங்களமேடு:மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த ஒகளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதைெயாட்டி கடந்த 17-ந் தேதி கணபதி பூஜை, கலச பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 28-ந் தேதி சக்தி அழைத்தல் மற்றும் சந்தனக்காப்பு நடைபெற்றது. நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் அன்பழகன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story