மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மங்களமேடு அருகே மகா மாரியம்மன் உள்ள கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

மகா மாரியம்மன் கோவில்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் சுவாமிகள் மலர் அலங்காரத்துடன் தினமும் திருவீதியுலா வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டம்

இதையடுத்து, மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. விழாவில், கீழக்குடிக்காடு, கழனிவாசல், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story