பூம்புகார் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
பூம்புகார் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடந்தன
மயிலாடுதுறை
காசிக்கு இணையான ஆறு கோவில்களில் முதன்மையான கோவிலாக விளங்கும் பூம்புகார் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடந்தன. மங்கை மடம் யோகநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசாமி கோவில், திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் ேகாவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், நாங்கூர் நம்புவோருக்கு அன்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருக்கடையூர்
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story