குதிரைமொழியில் மகாசண்டி ஹோமம்
மெஞ்ஞானபுரம் அருகே குதிரைமொழி சுந்தராட்சி அம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம் நடைபெற்றது.
தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே குதிரைமொழியிலுள்ள சுந்தராட்சி அம்மன் கோவிலில் 16-ஆம் ஆண்டு மகா சண்டி ஹோமம் வேதாகம சைவ திருமுறை பாராயணத்துடன் முதல் கால யாக பூஜை பூர்வாங்க பூஜையுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நேற்று காலையில் இரண்டாம் கால யாக பூஜை காலை 8 மணிக்கு மகா சண்டி ஹோமம் அஸ்வ பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, சுகாசினி பூஜை, வடுகை பூஜை ஆகிய பல்வேறு பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு பால், தயிர், பன்னீர், சந்தணம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாரதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story