மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகை வெளிப்பாளையம் மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகப்பட்டினம்
நாகை வெளிப்பாளையத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அருகில் உள்ள சிவன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பூத்தட்டு ஏந்தியவாறு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர்அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story