மகாமாரியம்மன் வீதி உலா


மகாமாரியம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 11 April 2023 12:30 AM IST (Updated: 11 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இடையக்கோட்டையில் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா நடந்தது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில், பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 28-ந்தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுதல், அக்னிசட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட மகாமாரியம்மன் உற்சவர், இடையக்கோட்டையில் அனைத்து தெருக்களிலும் வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், கருமாசநாயக்கனூர், மருநூத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, குத்திலிப்பை, கோவிந்தாபுரம், புதூர், புல்லாகவுண்டனூர், அய்யம்பாளையம், கோமாளிப்பட்டி, சோளியப்பகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


Next Story