மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
உப்பிலியபுரம் அருகே மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
திருச்சி
உப்பிலியபுரம், ஜூன்.14-
உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி அருேக பி.மேட்டூரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்ேகாவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. மேலும் வேங்கை வாகனத்தில் எதுமலுடையான், குதிரை வாகனத்தில் செல்லாயி அம்மன் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அங்காளபரமேஸ்வரி ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி பெண்களின் கும்மியாட்டம், இரவில் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story