மகாமாரியம்மன் கோவில் திருவிழா


மகாமாரியம்மன் கோவில் திருவிழா
x

மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

தவுட்டுப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசாமி கோவில்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி இரவு மகா மாரியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடந்து 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


Next Story